வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவு


வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் இன்றுடன் நிறைவு
x

வரி செலுத்துவோர் பலர் அவசர அவசரமாக இன்று கணக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர்.

புதுடெல்லி,

2024-2025 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ந்தேதியுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அவகாசத்தை செப்டம்பர் 15-ந்தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டது. ஐ.டி.ஆர். படிவங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். இதற்கிடையில், வரி செலுத்துவோர் அவசர அவசரமாக கணக்குகளை தாக்கல் செய்து வரும் நிலையில், இணையதளத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் பலர் அவதியடைந்துள்ளனர்.

1 More update

Next Story