மும்பை அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு

மும்பை அருகே உள்ள பிவாண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை அருகே கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
Published on

மும்பை,

மராட்டிய மாநில தலைநகர் மும்பை அருகே பிவாண்டி என்ற பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில், 3 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டிடம் மோசமான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று காலை வரையில் 21 சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com