மக்களவையில் நள்ளிரவிலும் நீடித்த விவாதம்

விவாதத்தில் கட்சி பாகுபாடு இன்றி பரவலாக வாய்ப்பு வழங்கப்பட்டது.
மக்களவையில் நள்ளிரவிலும் நீடித்த விவாதம்
Published on

புதுடெல்லி,

மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான விவா தம் மக்களவையில் நேற்று காலை தொடங்கியது.

இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள் பங்கேற்று பேசினார்கள். விவாதத்துக்கு 15 முதல் 18 மணி நேர மணி நேரம் வரை ஒதுக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து இருந்தார். இன்று (வெள்ளிக்கி ழமை) மாலை 4 மணிக்கு அதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

விவாதத்தில் கட்சி பாகுபாடு இன்றி பரவலாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் விவாதம் நள்ளிரவிலும் நீடித்தது. இரவு 11 மணிக்கு தெலுங்கானாவின் காங்கிரஸ் பெண் எம்.பி. காவியா பேசினார். நள்ளிரவிலும் அவையில் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com