என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது

என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி போன்ற மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

அந்த வகையில் டெல்லி சட்டசபையில் நேற்று தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா வைரஸ் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் இதற்காக டெல்லி சட்டசபையின் சிறப்பு ஒரு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில்கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பேசிய முதல்-மந்திரி கெஜ்ரிவால் மத்திய அரசு இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது அவர் எனக்கு, எனது மனைவி மற்றும் மந்திரி சகாக்களுக்கும் பிறந்தநாள் சான்றிதழ் இல்லை. எங்களை மத்திய அரசு தடுப்புக்காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்குமா? மத்தியமந்திரிகள் தங்களது பிறப்பு சான்றிதழை காட்ட முன்வருவார்களா? என கேள்வி எழுப்பினார்.

பின்னர் சபையில் உள்ள 70 உறுப்பினர்களிடம் உங்களிடம் பிறப்பு சான்றிதழ் உள்ளதா? என கெஜ்ரிவால் கேட்டார். அதற்கு 9 பேர் மட்டுமே பிறப்பு சான்றிதழ் இருப்பதாக கூறினர். 61 பேர் பிறப்பு சான்றிதழ் இல்லை என தெரிவித்தனர். அவர்களை மத்திய அரசு தடுப்பு காவல் நிலையத்துக்கு அனுப்புமா? என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com