பாடகா கொலை: மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது - ஹர்சிம்ரத் கவுர் பாதல்

பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக சிரோமணி அகாலிதள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் தொவித்துள்ளா.
பாடகா கொலை: மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது - ஹர்சிம்ரத் கவுர் பாதல்
Published on

பஞ்சாப்,

பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா மர்மநபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்சா மாவட்டத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கியால் சுட்டதில் சித்து மூஸ்வலாக் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு நேற்று முன் தினம் மூஸ்வாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதற்கு மறுநாளே சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிரோமணி அகாலிதள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் வெளியிட்ட டுவிட்டா பதிவில், சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட உடனேயே அவர் கொல்லப்பட்டது ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கேள்வியை எழுப்புகிறது.

பஞ்சாபில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட ஆம் ஆத்மி அரசின் தோல்வியை அம்பலப்படுத்துங்கள் என அவா பதிவிட்டுள்ளா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com