15வது நிதி குழுவின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறும்

15வது நிதி குழுவின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை நடைபெறும் என நிதி குழு அறிவித்துள்ளது.
15வது நிதி குழுவின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறும்
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகளும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டன. எனினும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார சூழலும் தேக்கமடைந்து உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளிலும் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், மத்திய நிதி குழு வெளியிட்டுள்ள செய்தியில், 15வது நிதி குழுவின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், உள்நாட்டு பொருளாதார உற்பத்தி, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி, ஜி.எஸ்.டி. இழப்பீடு, வருவாய் பற்றாக்குறைக்கான மானியம் மற்றும் நிதி கொள்கைகள் ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என நிதி குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com