

புதுடெல்லி,
தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆராய்வதற்காக, தேர்தல் கமிஷன் ஒரு குழுவை 11ந் தேதி ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கிறது.
மூத்த துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா தலைமையில் அக்குழு செல்கிறது. தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்த பிறகு தேர்தல் கமிஷனிடம் அக்குழு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.