

மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பை கோவண்டி சிவாஜி நகர் பகுதியில் கிளினிக் நடத்தி வந்த 50 வயதாகும் அல்தாப் ஹுசைன் கான் என்பவர், 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பைங்கன்வாடியில் வசிக்கும் இவர், கடந்த 7 ஆண்டுகளாக அப்பகுதியில் கிளினிக் வைத்து பேலியாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இதுகுறித்த ரகசிய தகவலின்பேரில், குற்றப்பிரிவு பேலீசார் மருத்துவ அதிகாரியுடன் இணைந்து, கிளினிக்கில் சேதனை செய்தனர். நோயாளி போல் சென்று மருந்துகள் பரிந்துரைப்பதை கண்காணித்தனர்.
அப்பேது முறையான மருத்துவச் சான்றுகள் இல்லாமல் மருந்துகளை எழுதிக்கெடுத்தபேது அல்தாப் ஹுசைன் கான் கையும் களவுமாக பிடிபட்டார். கிளினிக்கில் இருந்த மருத்துவ உபகரணங்கள், மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.