பிரபல மலையாள இயக்குனர் மரணம்

பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் கே.கே.ஹரிதாஸ் (வயது 55). அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டது.
பிரபல மலையாள இயக்குனர் மரணம்
Published on

கொச்சி,

கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பத்தினம்திட்டா மாவட்டம் மைலப்புறா பகுதியில் பிறந்த அவர் 20 படங்களை இயக்கி உள்ளார். அவர் நகைச்சுவைக்கு முன்னுரிமை கொடுத்து படங்களை இயக்கினார். 1994ம் ஆண்டு அவர் இயக்கி வெளிவந்த வது டாக்டரனு மலையாள படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதில் நடிகர் ஜெயராம் நடித்து இருந்தார்.

ஹரிதாசின் இறுதிச்சடங்கு இன்று (திங்கட்கிழமை) எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளியில் நடக்கிறது. அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com