கோவிஷீல்டு தடுப்பூசியின் இரு தவணைக்கான இடைவெளியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரு தவணைக்கான இடைவெளியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரு தவணைக்கான இடைவெளியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
Published on

புதுடெல்லி,

பிரிட்டனின் ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்துடன், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி, இரண்டு தவணைகளாக போடப்படுகிறது. இந்த இரு தவணைகளுக்குமான இடைவெளியை 6 முதல் 8 வாரங்களாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், இந்த இடைவெளி, 12 வாரங்களாக இருந்தால், தடுப்பூசியின் செயல்திறன் 81 புள்ளி 3 சதவீதமாக அதிகரிக்கும் என லான்செட் எனும் மருத்துவ ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த இடைவெளியை ஆறு வாரத்திற்கு கீழ் குறைத்தால், தடுப்பூசியின் செயல்திறன் 55 புள்ளி 1 சதவீதமாக குறைவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பிரிட்டனில் 12 வார இடைவெளியிலும், கனடாவில் 16 வார இடைவெளியிலும் கோவிஷீல்டு தடுப்பூசி அளிக்கப்படுகிறது. இதேபோல் இந்தியாவிலும் இரு தவணைகளுக்கான இடைவெளியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிப்பதோடு, தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டையும் ஓரளவுக்கு குறைக்கலாம் என்பதால் இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com