

லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. சுயேட்சையாகவும் பலர் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி உத்தரபிரதேச தேர்தலில் 100 இடங்களில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளரிடம் ஒவைசி கூறுகையில், இது சமூகநீதிக்கான போட்டியல்ல. யோகி ஆதித்யநாத் - அகிலேஷ் யாதவ் இடையே சிறந்த இந்து யார்? என்பதிலேயே போட்டி. மோடியை விட சிறந்த இந்துவாக இவர்கள் இருவரும் போட்டியிடுகின்றனர். ஒருவர் ஒரு இந்துமத கோவிலை பற்றி பேசினார் மற்றொருவர் மற்றொரு இந்துமத கோவிலை பற்றி பேசுகிறார் என்றார்.