தெலுங்கானாவில் இதயவடிவில் உருவாகி வரும் முதல் கண்ணாடி பாலம்

முதல் கண்ணாடி பாலம் என்பதால் பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
தெலுங்கானாவில் இதயவடிவில் உருவாகி வரும் முதல் கண்ணாடி பாலம்
Published on

நகரி,

தெலுங்கானா மாநிலத்தில் முதல் கண்ணாடி பாலம் சித்தி பேட்டை மாவட்டம் ஹூஸ்னாபாத் நகரத்தில் கட்டப்பட்டு வருகிறது. காக்கதீய மன்னர்கள் காலத்து எல்லம்மா ஏரியை அழகுபடுத் தும் பணியில் ஒரு பகுதியாக 5 அடி அகலம், 150 மீட்டர் உயரத்துடன் இதயம் போன்ற வடி வில் இந்த பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ரூ.4.22 கோடி செலவில் உருவாக்கப்படும் இந்த பாலத்தின் பணி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைந்து விடும். முதல் கண்ணாடி பாலம் (பிரிட்ஜ்) என்பதால் பணிகள் முடிவடைவதற்குள்ளேயே இதை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் திரண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com