அசாமில் பாஜகவின் 70 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அசாம் சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் 70 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அசாமில் பாஜகவின் 70 வேட்பாளர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Published on

புதுடெல்லி,

அசாமின் 126 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 27, ஏப்ரல் 1 மற்றும் 6-ந்தேதி என 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்கு ஆளும் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அசாம் கண பரிஷத் மற்றும் ஐக்கிய மக்களின் விடுதலை கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் பா.ஜனதா, இந்த கட்சிகளுக்கு முறையே 26 மற்றும் 8 இடங்களை ஒதுக்கி இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் வேகமாக நடந்து வந்தது. இதற்காக கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முன்தினம் கூடி பட்டியலை இறுதி செய்தது.

இதைத்தொடர்ந்து 70 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் நேற்று வெளியிட்டார். இதில் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் மஜூலி தொகுதியிலும், மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

இதில் முக்கியமாக தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 11 பேருக்கு மீண்டும் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அந்த தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com