“நிலைமை மோசம் என அரசு தரப்பே ஒப்புதல்” - பொருளாதாரம் குறித்து ராகுல் பரபரப்பு கருத்து

நிலைமை மோசம் என அரசு தரப்பே ஒப்புதல் அளித்துள்ளதாக பொருளாதாரம் குறித்து ராகுல் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
“நிலைமை மோசம் என அரசு தரப்பே ஒப்புதல்” - பொருளாதாரம் குறித்து ராகுல் பரபரப்பு கருத்து
Published on

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார நிலை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக இருப்பதாக மத்திய அரசு அமைப்பான நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறி அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளார்.

இதுபற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்து டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர், இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என நாம் நீண்ட காலமாக எச்சரித்து வந்ததை கடைசியில் அரசின் சொந்த பொருளாதார ஆலோசகர்களே ஒப்புக்கொண்டு விட்டனர் என கூறி உள்ளார்.

மேலும், பேராசைப்படுவோருக்கு அல்லாமல் தேவைப்படுவோர் கைகளில் பணத்தை தந்து, இப்போதாவது எங்கள் தீர்வை ஏற்று, பொருளாதாரத்தை பலப்படுத்துங்கள் எனவும் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com