

பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கொரோனா நெருக்கடியால் மக்கள் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது இந்த அரசு கருணை காட்டவில்லை. சொத்து வரி, மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் கட்டணம், உர விலையை உயர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. வரியை காலதாமதமாக செலுத்துவதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
கொரோனா முதல் அலைக்கு பிறகு அதன் 2-வது அலை வரும் என்று அரசுக்கு மதிப்பிட்டு இருந்தது. ஆனால் அதனை எதிர்கொள்ள போதுமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மருத்துவமனைகளில் மருந்து, படுக்கைகள் இல்லை. மத்திய-மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுக்காமல் பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்துடன் விளையாடுகின்றன.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.