போலி நிறுவனங்களை கண்டறிய அரசு புதிய நடவடிக்கை - புகைப்படம் மற்றும் புவிசார் விவரங்களை கேட்கிறது

போலி நிறுவனங்களை கண்டறிய அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் புவிசார் விவரங்களை கேட்கிறது.
போலி நிறுவனங்களை கண்டறிய அரசு புதிய நடவடிக்கை - புகைப்படம் மற்றும் புவிசார் விவரங்களை கேட்கிறது
Published on

புதுடெல்லி,

பெருமளவில் கருப்பு பணங்களை பதுக்குவோர் போலி நிறுவனங்கள் பெயரில் அந்த பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். எனவே இந்த போலி நிறுவனங்களை கண்டறிய மத்திய அரசு புதிய நடவடிக்கை ஒன்றை தொடங்கி உள்ளது.

அதாவது நாடு முழுவதும் இயங்கி வரும் நிறுவனங்கள் அனைத்தும் தாங்கள் பதிவு செய்த அலுவலகத்தின் புகைப்படம் மற்றும் புவியியல் சார்ந்த விவரங்களை அரசிடம் சமர்ப்பிக்க பெருநிறுவன நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அத்துடன் அந்தந்த நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அவற்றின் தணிக்கையாளர்கள், இயக்குனர் அல்லது முக்கிய அதிகாரிகள் பற்றிய விவரங்களையும் பெறுவதற்கு இந்த அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் செயல்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து அறிய முடியும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நிறுவனங்களின் புகைப்படம் மற்றும் புவிசார் விவரங்களை அரசு பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com