ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சிலரை சிக்க வைக்க சி.பி.ஐ. என்னை மிரட்டியது - கோர்ட்டில் இடைத்தரகர் குற்றச்சாட்டு

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சிலரை சிக்க வைக்க சி.பி.ஐ. தன்னை மிரட்டியதாக, கோர்ட்டில் இடைத்தரகர் குற்றம் சாட்டினார்.
ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் சிலரை சிக்க வைக்க சி.பி.ஐ. என்னை மிரட்டியது - கோர்ட்டில் இடைத்தரகர் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னை தனிமை வார்டில் அடைக்க முயற்சி நடப்பதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, நீதிபதி அரவிந்த் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மைக்கேல் சார்பில் ஆஜரான வக்கீல் அலோக் ஜோசப், துபாயில் மைக்கேலை சந்தித்த சி.பி.ஐ. அதிகாரிகள், இந்த வழக்கில் சிலரை சிக்கவைக்க வேண்டும். அதற்காக அவர்களின் பெயர்களை கூறாவிட்டால், சிறையில் உனக்கு பிரச்சினைகள் வரும் என்று மிரட்டினர் என்று கூறினார்.

அதற்கு சி.பி.ஐ. வக்கீல் டி.பி.சிங், இது உண்மைக்கு புறம்பானது என்று மறுப்பு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com