புதிய வருமானவரி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்; ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது

இச்சட்டத்தில் புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
புதுடெல்லி,
1961-ம் ஆண்டின் வருமானவரி சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமானவரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. கடந்த 12-ந் தேதி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து, சட்டவடிவம் பெற்றுள்ள புதிய வருமானவரி சட்டம்-2025, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமலுக்கு வருகிறது.
இச்சட்டத்தில் புதிய வரி எதுவும் அறிவிக்கப்படவில்லை. சிக்கலான வரிசட்டங்களை எளிதாக புரியும்வகையில் எளிதான வார்த்தைகளுடன், அத்தியாயங்கள், உட்பிரிவுகள் ஆகியவற்றை குறைத்து இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






