தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகரிப்பு நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மந்திரி மான்சுக் எல்.மாண்டிய எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:–
தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் அதிகரிப்பு நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய நாடு முழுவதும் 91 ஆயிரத்து 287 கிலோ மீட்டர் நீளத்துக்கு தேசிய நெடுஞ்சாலை இருந்தது. அது தற்போது 1 லட்சத்து 31 ஆயிரத்து 326 கிலோ மீட்டர் தூரமாக அதிகரித்து உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட நீட்டிப்பு, விரிவாக்கம் போன்ற பணிகளால் இது சாத்தியமானது என அதில் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் தற்போது 39 ஆயிரத்து 40 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய மாநில நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் 53 ஆயிரத்து 31 கிலோ மீட்டர் தூரத்துக்கான மாநில சாலைகள் போடுவதற்கான திட்ட அனுமதி ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com