

புதுடெல்லி,
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 20.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இது தெரிய வந்துள்ளது.
சீன பொருளாதாரம் கூட முதல் காலாண்டில் 7.9 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது.கடந்த நிதியாண்டில் இதே முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 24.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.