துபாயில் இந்தியர்களுக்கு உதவி வந்த கேரள சமூக சேவகர் நந்தி நாசர் மரணம்

துபாயில் இந்தியர்களுக்கு உதவி வந்த கேரள சமூக சேவகர் நந்தி நாசர் மரணமடைந்தார்.
துபாயில் இந்தியர்களுக்கு உதவி வந்த கேரள சமூக சேவகர் நந்தி நாசர் மரணம்
Published on

துபாய்,

துபாயில் வசித்து வந்தவர் நந்தி நாசர். இவரது சொந்த ஊர், கேரளா மாநிலத்தின் கொயிலாண்டி ஆகும். சமூக சேவகரான இவர், அமீரகத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். துபாயில் எதிர்பாராதவிதமாக இந்தியர்கள் யாராவது உயிரிழந்தால், அவர்களது உடல்களை துபாயில் அடக்கம் செய்யவோ அல்லது அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவோ தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்து வந்தார்.

இந்தநிலையில் நந்தி நாசருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார்.

அவரது மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல்வேறு தரப்பினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com