இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஒரே நாளில் 12,591 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 12,591 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று: ஒரே நாளில் 12,591 பேருக்கு பாதிப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நேற்று 10,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 12,591 ஆக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,48,45,401-லிருந்து 4,48,57,992 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 63,562-லிருந்து 65,286 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,190-லிருந்து 5,31,230 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 8,175 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இன்று 10,827 பேர் வீடு திரும்பியுள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com