அடுத்த ஆண்டு புதிய ராணுவ சீருடை அறிமுகம்

அடுத்த ஆண்டு ராணுவத்துக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது.
அடுத்த ஆண்டு புதிய ராணுவ சீருடை அறிமுகம்
Published on

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு ராணுவத்துக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது. ஜனவரி 15-ந்தேதி நடைபெற உள்ள ராணுவ தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையை ராணுவ வீரர்கள் முதல்முறையாக அணிந்து பங்கேற்பார்கள். பல்வேறு நாடுகளின் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. இது, மிகவும் நீடித்து உழைக்கக்கூடியது. கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் அணிந்து கொள்ள சவுகரியமானது.

ராணுவ வீரர்கள் பணியாற்றும் இடம், அங்குள்ள வானிலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு, சீருடை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுபோல், கடற்படைக்கு கடந்த ஆண்டு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com