

லக்னோ,
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நேற்று முன்தினம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று, கவிழ்ந்தது.
இதையொட்டி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.
அதில் அவர், கர்நாடகத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, ஜனநாயக நெறிமுறைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அதிகாரத்தையும், பண பலத்தையும் பாரதீய ஜனதா கட்சி பயன்படுத்திய விதம், ஜனநாயக வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயமாக பதிவு செய்யப்படும். பாரதீய ஜனதாவின் இந்த செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என கூறி உள்ளார்.