ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது - சம்பித் பத்ரா

ஜனாதிபதி குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என பாஜக செய்திதொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பற்றி சர்ச்சை பேச்சு: மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது - சம்பித் பத்ரா
Published on

ஒடிசா,

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசும்போது, சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார்!.

ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார்.

அவரது பேச்சை கேட்ட சுற்றியிருந்த மக்களும் ஆரவாரம் எழுப்பினர். சிரிப்பொலியும் எழுந்தது. அவரது இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என பாஜக செய்திதொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com