'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைவர் ஜூன் 6-ஆம் தேதி இந்தியா வருகிறார்

டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' தலைவர் அபிஜித் தீப்கே
Published on

புது டெல்லி,

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து சிஜேபி (CJP) தலைவர் அபிஜித் தீப்கே,  ஜூன் 6-ம் தேதி டெல்லி திரும்புவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தர்மேந்திர பிரதான்

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டம் நடத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்

 இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அதில், இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க வருமாறு மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

நேரம் வந்துவிட்டது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதையை பின்பற்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று அமைதியான முறையில் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பினால், அவர்கள் நிச்சயமாக நமக்கு செவிசாய்க்க வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார்.

இணையுமாறு

ஜூன் 6ஆம் தேதி விமான நிலையத்தில் தன்னுடன் இணையுமாறு டிப்கே தனது ஆதரவாளர்களை வலியுறுத்தினார்.  சனிக்கிழமை காலையில் நான் டெல்லிக்கு வருவது என முடிவு செய்துள்ளேன். தயவுசெய்து விமான நிலையத்தில் என்னுடன் இணையுங்கள்.

ஜந்தர் மந்தர்

நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி கோருவதற்காக, நாடாளுமன்றத்தை நோக்கி செல்வோம் என்று அவர் கூறினார். அபிஜித் தீப்கே தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சமூக தளத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com