“ஒருவருக்கு ஒருவர் உதவுவதே மதங்களின் படிப்பினை” - ராகுல் காந்தி எம்.பி. ரமலான் வாழ்த்து

சகோதரத்துவத்துடன் ஒருவருக்கு ஒருவர் உதவுவதே மதங்களின் படிப்பினை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
“ஒருவருக்கு ஒருவர் உதவுவதே மதங்களின் படிப்பினை” - ராகுல் காந்தி எம்.பி. ரமலான் வாழ்த்து
Published on

புதுடெல்லி,

இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பிருத்தல் ஆகும். இஸ்லாமிய மாதமான ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இன்றைய தினம் இந்தியாவில் புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியில் தலைவர்கள், நாட்டு மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற்னர்.

அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், இந்த கடினமான நேரத்தில், சகோதரத்துவத்துடன் ஒருவருக்கொருவர் உதவுவது தான் ஒவ்வொரு மதத்தின் படிப்பினையுமாகும். இதுவே நமது நாட்டின் பாரம்பரியம். அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள் என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com