

புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேறியது. பெருமளவிலான சுரங்கங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு, உற்பத்தியை பெருக்கி, இறக்குமதியை குறைப்பதுதான் இதன் நோக்கம். இதன்மூலம் வேவைவாய்ப்பு பெருகும். இதுகுறித்து மக்களவையில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:-
இந்தியாவில் 95 கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் உள்ள அதே திறன் இந்தியாவிடமும் உள்ளது. ஆனால், தங்கம், நிலக்கரி ஆகியவற்றை இறக்குமதி செய்து வருகிறோம்.
சுரங்க தொழிலை பெருக்க இதில் தனியாரை ஈடுபடுத்துவோம். இந்த சீர்திருத்தம் மூலம் 55 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.