

புதுடெல்லி,
இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரு தலைமை தளபதி பதவியை உருவாக்க மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீர்மானித்தது.
இதற்கான அதிகாரப்பூர்வ முடிவு, கடந்த 24-ந் தேதி நடந்த பாதுகாப்புக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது. முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக நியமிக்கப்பட இருப்பவர், ராணுவ மந்திரியின் முதன்மை ராணுவ ஆலோசகராகவும் பொறுப்பு வகிப்பார்.
இந்தநிலையில் தலைமை தளபதியின் அதிகபட்ச வயது வரம்பு 65 என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதற்காக ராணுவ விதிகள், 1954-ல் தேவையான திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது.