மந்திரிசபையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படும் எம்.பிக்கள் பிரதமர் இல்லம் வருகை

மத்திய மந்திரிசபையில் தற்போது பா.ஜ.க. கூட்டணி கட்சிகளில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மட்டும் இடம் பெற்றிருக்கிறது. பிற கட்சிகள் இடம் பெறவில்லை.
மந்திரிசபையில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படும் எம்.பிக்கள் பிரதமர் இல்லம் வருகை
Published on

புதுடெல்லி,

மத்திய மந்திரிசபையை விஸ்தரிக்கவும், மாற்றியமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதையொட்டி அவர் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வந்தார். நேற்று முன்தினமும் அமித் ஷா, பா.ஜ.க. பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

இன்று (புதன்கிழமை) மாலை மத்திய மந்திரிசபை விஸ்தரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன மத்திய மந்திரிசபை விஸ்தரிப்பின்போது 20 மந்திரிகள் புதிதாக பதவி ஏற்கக்கூடும் எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில், மந்திரி சபையில் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் எம்.பிக்கள் பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். பிரதமர் இல்லத்திற்கு இன்று வருகை தந்துள்ள எம்.பிக்கள் விவரம்:

  • ஜோதிர் ஆதித்ய சிந்தியா
  • நாரயண் ரானே
  • சர்பானந்த சோனோவால்
  • அனுப்ரியா படேல்
  • கபில் பட்டீல்
  • மீனாக்ஷி லேகி
  • அஜய் பட்
  • புபேந்தர் யதவ்,
  • சுனிதா தக்கல்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com