அயோத்தி வழக்கில் சீராய்வு மனுவுக்கு சிறுபான்மையினர் ஆணையம் எதிர்ப்பு

அயோத்தி வழக்கில் சீராய்வு மனுவுக்கு சிறுபான்மையினர் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அயோத்தி வழக்கில் சீராய்வு மனுவுக்கு சிறுபான்மையினர் ஆணையம் எதிர்ப்பு
Published on

புதுடெல்லி,

தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் காயோருல் ஹசன் ரிஸ்வி, ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

அயோத்தி வழக்கு தீர்ப்பை மதிப்போம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், தீர்ப்புக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால், இப்போது சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக கூறியுள்ளது. மசூதி கட்ட அளிக்கப்படும் 5 ஏக்கர் நிலத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சீராய்வு மனு தாக்கல் செய்யக்கூடாது. அப்படி தாக்கல் செய்வது, ராமர் கோவில் கட்ட முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருப்பதாக இந்துக்களுக்கு உணர்த்தி விடும். மேலும், முஸ்லிம்கள் நலன்களுக்கும் இது உகந்தது அல்ல. இரு மதத்தினரின் ஒற்றுமையை சீர்குலைத்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com