

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்ற தேசிய தலைவர் அமித்ஷா, கம்பத்தில் தேசியகொடியை ஏற்றினார். அப்போது தவறுதலாக தேசியகொடி கீழ்நோக்கி வந்து விழுந்தது. உடனே கட்சி நிர்வாகிகள் கூச்சலிட்டதால், சுதாரித்துக்கொண்ட அவர் தேசியகொடியை மேலே ஏற்றினார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகளை டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ள காங்கிரஸ் கட்சி கிண்டலாக சில கருத்துக்களை குறிப்பிட்டுள்ளது.
அதில், தேசியகொடியை ஒழுங்காக கையாளத்தெரியாதவர்கள் எப்படி நாட்டை வழிநடத்த முடியும்?. இதுவரை தேசியகொடிக்கு இதுபோன்ற அவமதிப்பு நடந்தது இல்லை. தேசப்பற்று கொண்டவர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் சிலருக்கு தேசிய கீதத்தின் மரபுகள், மாண்புகள் தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.