பசு திருட வந்ததாக கருதி கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

பசு திருட வந்ததாக கருதி கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

பசு திருட வந்ததாக கருதி கும்பல் தாக்குதலில் ஒருவர் பலியாயினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
Published on

கவுகாத்தி,

அசாம் மாநிலம் சூடீ பகுதியில் உள்ள போலாகுரி கிராமத்தை சேர்ந்த 4 பேர் அருகில் உள்ள டிப்லோங்கா தேயிலை எஸ்டேட்டுக்கு பன்றிகள் வாங்குவதற்காக சென்றனர். அவர்களை பார்த்த பொதுமக்கள் சிலர் பசு திருட வந்திருப்பதாக சந்தேகப்பட்டு 4 பேரையும் உருட்டு கட்டைகளால் சரமாரியாக தாக்கினார்கள்.

தகவல் அறிந்து அங்குவந்த போலீசார் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்று சேர்த்தனர். அங்கு தேபென் ராஜ்போன்ஷி என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 3 பேரும் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com