புதிய உலகத்துடன் இணைந்து வளர தயாராக உள்ளோம் - பிரதமர் மோடி

புதிய உலகத்துடன் இணைந்து வளர புதிய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
புதிய உலகத்துடன் இணைந்து வளர தயாராக உள்ளோம் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

2021 -ம் ஆண்டு சிஐஐ வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:-

தொழில்துறையில் உள்ள அனைத்து நண்பர்களும் அமைப்புகளும் இந்தியாவின் வளர்ச்சி கதையின் முக்கிய பகுதி. உங்கள் அனைவரின் முயற்சியால், இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் வேகமடைகிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே பயன்படுத்த ஒவோரு இந்தியரும் விரும்புகின்றனர். நாட்டு மக்களின் உணர்வுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் இணைந்தே உள்ளன. வேளாண்துறையில் சீர்திருத்தங்கள் செய்து விவசாயிகளை உள்நாட்டு, உலகசந்தையில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுலபமாக தொழில் செய்யும் தரவரிசையில் இந்தியா இன்று பெரும் முன்னேற்றங்களை எட்டி வருகிறது.

விவசாயத் துறை ஒரு காலத்தில் வாழ்வாதாரமாக மட்டுமே கருதப்பட்டது. ஆனால் தற்போது விவசாயத் துறையில் வரலாற்றுச் சீர்திருத்தங்கள் மூலம் இந்திய விவசாயிகளை உள்நாட்டு மற்றும் உலக சந்தைகளுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com