புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர்: பிரதமர் மோடி

புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர்: பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் ஞாயிற்றுக்கிழமை, முதன் முதலாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்று கிழமையில் மன் கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. பிரதமர் மோடியின் 53-வது மன் கி பாத் உரை இதுவாகும். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு வரும் முதல் மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • இன்று கனத்த இதயத்துடன் உரையை துவக்குகிறேன். 10 நாளுக்கு முன், நமது தேசம் தைரியமான 40 வீரர்களை இழந்துள்ளது.
  • புல்வாமா தாக்குதலில் வீரர்களின் உயிர்த்தியாகத்தால் நாட்டுமக்கள் துயரமும் கோபமும் அடைந்துள்ளனர்.
  • நமது ராணுவம் எப்போதும், தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒருபுறம் அமைதியை நிலைநாட்டுகின்றனர் . மறுபுறம் பயங்கரவாதிகளுக்கு, அவர்களுக்கு புரியும் மொழியிலேயே பதிலடி கொடுக்கின்றனர்.
  • வீரர்களின் உயிர்த்தியாகம், பயங்கரவாதிகளின் அடிப்படை தளத்தை தகர்த்து எறியும்.
  • துணிச்சலான வீரர்களின் உயிர் தியாகம், நாடு முழுவதும் நம்பிக்கையையும், வலிமையையும் ஏற்படுத்தும்.வேறுபாடுகளை மறந்து பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை உறுதியாக வைக்க வேண்டும்.
  • தேசிய போர் நினைவகம் இல்லாமல் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இந்தியா கேட் மற்றும் அமர் ஜவான் ஜோதி பகுதிகளில் புதிய தேசிய போர் நினைவிடம் கட்டப்படும்.
  • புதிய நினைவகம், இந்தியா கேட் மற்றும் அமர்ஜவான் ஜோதி இடையே அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நினைவகம், தைரியமிக்க நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்.
  • பள்ளி தேர்வுகளுக்கான நேரம் நெருங்கி விட்டது. இன்னும் சில வாரங்களில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கி விடும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், கடந்த 5 மாதங்களில் 12 லட்சம் ஏழை மக்கள் பயன்பெற்றுள்ளனர். மருத்துவ வசதி பெற முடியாத ஏழைகளுக்கு இந்த திட்டத்தை பற்றி தெரியப்படுத்துங்கள்.
  • தேர்தல் வர இருப்பதால் 3 மாதங்களுக்கு பிறகுதான் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச முடியும்.
  • பல ஆண்டுகளுக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் நானும் வேட்பாளராக போட்டியிடுகிறேன்.
  • மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் உங்களை தொடர்பு கொள்வது எனக்கு தனித்துவமிக்க அனுபவமாக இருந்தது. ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கான குடும்பங்களை நான் மன் கி பாத் மூலம் தொடர்பு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com