நாடு முழுவதும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 55.5 கோடி

நாடு முழுவதும் 55.5 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 55.5 கோடி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் காணப்பட்டன. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய நிலவரப்படி நாட்டில் 55.36 கோடி கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 14 லட்சத்து 13 ஆயிரத்து 951 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதனால் நேற்று வரை (செப்டம்பர் 20) நாடு முழுவதும் 55,50,35,717 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com