நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 54.04 கோடி

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 54.04 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 54.04 கோடி
Published on

புதுடெல்லி,

நாட்டில் கடந்த ஜனவரியில் இருந்து கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு உள்நாட்டு உற்பத்தி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 54 கோடியே 4 லட்சத்து 78 ஆயிரத்து 610 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கின்றது.

இவற்றில் வீணானது உள்பட இதுவரை நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் இதுவரை 52 கோடியே 96 ஆயிரத்து 418 எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com