

புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 81,39,33,785 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் (இலவச அடிப்படையில்) வழங்கப்பட்டு உள்ளன.
இதுதவிர, 85,92,550 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 4,23,43,720 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கையிருப்பில் உள்ளன என்று தெரிவித்து உள்ளது.