

புதுடெல்லி,
நாட்டில் உள்ள கழுகுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார். அப்போது அவர், 30 ஆண்டுகளுக்கு முன்னர் 4 கோடி என்ற அளவுக்கு இருந்த கழுகுகளின் எண்ணிக்கை, தற்போது 19 ஆயிரமாக குறைந்து விட்டது என கூறினார்.
கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது முதலில் 1990-களின் மத்தியிலும், பின்னர் 2007-ம் ஆண்டிலும் கண்டறியப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய அளவில் கழுகுகளின் எண்ணிக்கையை, பி.என்.எச்.எஸ். என்று அழைக்கப்படுகிற பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வருவதாகவும், இதற்கான ஆதரவை மத்திய சுற்றுச்சூழல்- வனத்துறை மற்றும் மாநில அரசுகள் வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.