

புதுடெல்லி,
ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடி அளவுக்கு ரெயில்வேக்கு இதன் மூலம் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த இழப்பை குறைப்பதற்கு திட்டம் வகுத்த ரெயில்வே, இந்த சலுகையை தானாகவே விட்டுத்தர கோருவது என தீர்மானித்தது.
அதன்படி விருப்பமுடைய மூத்த குடிமக்கள் தங்கள் கட்டண சலுகையை முழுவதும் தானாக விட்டுத்தரலாம் என கடந்த 2016ம் ஆண்டு அறிவித்தது. பின்னர் சலுகையில் பாதியை விட்டுத்தரலாம் என கடந்த ஆண்டு அறிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட மூத்த குடிமக்கள் பலரும், தங்கள் கட்டண சலுகையை விட்டுக் கொடுத்தனர்.
கடந்த ஆண்டு ஜூலை 22 முதல் கடந்த 31ந்தேதி வரை சுமார் 19 லட்சம் பேர் தங்கள் சலுகையை விட்டுக்கொடுத்துள்ளனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் முழு சலுகையையும், 9 லட்சம் பேர் பாதி சலுகையையும் விட்டுக்கொடுத்தனர். இதனால் ரெயில்வே ரூ.32.30 கோடியை சேமித்துள்ளது.
இவ்வாறு இந்த திட்டம் நல்ல பலனை தந்துள்ளதை தொடர்ந்து, கட்டண சலுகை பெறும் பிற பிரிவினரிடமும் இந்த விட்டுக்கொடுத்தல் திட்டத்தை விரிவுபடுத்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.