

திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 78 ஆயிரத்து 57 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 33 ஆயிரத்து 406 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று தேவஸ்தானம் அறிவித்த ஒருநாள் உண் டியல் காணிக்கை ரூ.4 கோடியே 15 லட்சம் ஆகும்.
அன்று 4 லட்சத்து 62 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 2 லட்சத்து 40 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 349 பேர் சிகிச்சை பெற்றனர்.
நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட் மெண்டுகளில் பக்தர்கள் காத்திருந்தனர். தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட 'டைம் ஸ்லாட்' டோக்கன்கள் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சுமார் 12 மணி நேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.