பறந்துகொண்டிருந்த விமானத்தில் கதவை திறக்க முயன்ற பயணி - புவனேசுவரத்தில் அவசரமாக தரை இறங்கியது

பறந்துகொண்டிருந்த விமானத்தில் கதவை திறக்க முயன்ற பயணியின் செயலால், புவனேசுவரத்தில் அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
பறந்துகொண்டிருந்த விமானத்தில் கதவை திறக்க முயன்ற பயணி - புவனேசுவரத்தில் அவசரமாக தரை இறங்கியது
Published on

புவனேசுவரம்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்தபோது 20 வயதுள்ள ஒரு பயணி திடீரென ரகளையில் ஈடுபட்டார். விமானத்தின் கதவையும் அவர் திறக்க முயன்றார். இதனால் மற்ற பயணிகள் கூச்சல் போட்டனர். பலமுறை எச்சரித்தும் அந்த வாலிபர் கதவை திறக்க முயன்றதால் அந்த விமானம் அவசரமாக புவனேசுவரத்தில் உள்ள பிஜூ பட்நாயக் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

ஊழியர்கள் அந்த வாலிபரை விமானத்தில் இருந்து இறக்கி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அந்த விமானம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்றது. அந்த வாலிபரை போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com