

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) நடந்து வருகிறது. இந்த பணிகளில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி ஆசி ரியர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனால் அரசு அலுவலகங்களில் பணிகளும், பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூரு மாகடி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான குரு குல சர்வதேச பள்ளியில் 7 ஆசிரியர்களில் 6 பேர் எஸ்.ஐ.ஆர். பணிக்கு சென்றுவிடுகிறார்களாம். இதனால் ஒரே ஆசிரியர் மட்டும் 8, 9-ம் வகுப்புகளுக்கும், எஸ்.எஸ்.எல்.சி.க்கும் (10-ம் வகுப்பு) பாடம் நடத்தி வருகிறார். இதனால் அவரும் சரியாக பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நேற்று மாணவ- மாணவிகள் இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்றும். பாடம் நடத்த போதிய ஆசிரியர்களை நியமித்துவிட்டு, மற்ற ஆசிரியர்களை எஸ்.ஐ.ஆர். பணி யில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
கைகளில் பதாகைகளை ஏந்தி மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் வந்து மாணவர் களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.