தொற்று பாதிப்பு குறைவு: தானே, நவிமும்பையில் கூடுதல் தளர்வுகளுக்கு வாய்ப்பு

தானே மற்றும் நவிமும்பை பகுதிகள் 2-வது பிரிவுக்கு முன்னேறி இருப்பதால் அங்கு கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட, மாநகர பகுதிகளுக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பாதிப்பு குறைந்ததால் தானே மாவட்டத்தில் பல பகுதிகள் 3-வது பிரிவில் இருந்து 2-வது பிரிவுக்கு முன்னேறி உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேகர் வெளியிட்டுள்ள தகவலில், தானே, நவிமும்பை, கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி பகுதிகள் 2-வது பிரிவுக்கு வந்திருப்பதாக கூறியுள்ளார். எனினும் மாவட்டத்தில் மற்ற பகுதிகள் 3-வது பிரிவில் நீடிக்கிறது எனவும் அவர் கூறினார்.

2-வது பிரிவில் இடம்பெற்று உள்ள நகரங்களில் தியேட்டர், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை வழக்கம் போல திறந்து வைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 2-வது பிரிவில் வந்து உள்ள தானே, நவிமும்பை, கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி பகுதிகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com