பெண் மருத்துவர் கொலை: கொல்கத்தா மருத்துவமனை முழுவதும் சி.பி.ஐ சோதனை


பெண் மருத்துவர் கொலை: கொல்கத்தா மருத்துவமனை முழுவதும் சி.பி.ஐ சோதனை
x
தினத்தந்தி 19 Aug 2024 11:30 PM IST (Updated: 19 Aug 2024 11:42 PM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது

கொல்கத்தா,

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடம் 4- நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக, பெண் மருத்துவர் பணியாற்றிய நெஞ்சக நோய் பிரிவு அறையிலும் சிபிஐ அதிகாரிகள் தடயவியல் உள்ளிட்ட சோதனைகளை செய்ததுடன், இன்று ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர்.

1 More update

Next Story