ராமர் பாலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - இளம் என்ஜினீயர்களுக்கு மத்திய மந்திரி அழைப்பு

ராமர் பாலம் போன்ற கலாசார சின்னங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும்படி இளம் தலைமுறை என்ஜினீயர்களுக்கு மத்திய மந்திரி அழைப்பு விடுத்துள்ளார்.
ராமர் பாலம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - இளம் என்ஜினீயர்களுக்கு மத்திய மந்திரி அழைப்பு
Published on

காரக்பூர்,

மேற்கு வங்காள மாநிலம் காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

பல்லாண்டுகளாக ஞானத்தில் இருந்து விஞ்ஞானம் வரை உலகத்தின் தலைமை நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. உலகின் முதல் மொழி சமஸ்கிருதம்தான்.

நாம் வரலாற்றை திரும்பி பார்த்தால், ராமர் பாலத்தை நமது என்ஜினீயர்கள் கட்டினார்கள் என்பது நினைவுக்கு வருகிறது. அதுபற்றி இளம் தலைமுறை என்ஜினீயர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.

ராமர் பாலம் போன்ற கலாசார சின்னங்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டால், நம் நாட்டின் நினைவு சின்னங்கள் பற்றிய புதிய உண்மைகள் வெளிவரும் என்று கருதுகிறேன். இதன்மூலம், பழங்காலத்திலேயே நாம் எவ்வாறு கட்டிடக்கலையில் சிறந்து விளங்கினோம் என்பதை உலகம் மீண்டும் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க இலங்கைக்கு ராமரும், அவருடைய படையினரும் செல்ல வசதியாக வானர சேனைகள் இந்த பாலத்தை கட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால், அது ராமர் பாலம் அல்ல, இயற்கையாக உருவான மண்திட்டு என்று ஒருசாரார் சொல்கிறார்கள்.

ராமர் பாலம், மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கு சரித்திரபூர்வமான, விஞ்ஞானபூர்வமான ஆதாரம் ஏதும் கிடையாது என்று முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தொல்லியல் துறை மனு தாக்கல் செய்தது. பின்னர், அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com