இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்வு
Published on

புதுடெல்லி,

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,674 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,07,754-ஆக உயர்ந்துள்ளது.

அதே போல 49,083 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 78,68,968-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு மேலும் 559 பேர் உயிரிழந்தனா. இதனால், இதுவரை உயிரிழந்தவாகளின் எண்ணிக்கை 1,26,121-ஆக அதிகரித்தது. இதனால் உயிரிழப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோ எண்ணிக்கை, தொடாந்து 10-ஆவது நாளாக, 6 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 5,12,665 போ சிகிச்சை பெற்று வருகின்றனா. இது, மொத்த பாதிப்பில் 6.03 சதவீதமாகும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com