மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மக்கள்தான் பாராட்ட வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

கழிவு நீர் அகற்றுவதில் இயந்திரங்களின் பயன்பாடு பாதுகாப்பானதாக அமையும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மக்கள்தான் பாராட்ட வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிக மழை பெய்ததால் அதனால் ஏற்பட்ட பாதிப்பு வருத்தமாக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மத்தியக்குழு அதிகாரிகள் பாராட்டி விட்டதாக கூறுகிறார்கள். உண்மையில், மக்கள்தான் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்ட வேண்டும்.உண்மை அறிந்து செயல்பட வேண்டும்.

இந்தளவுக்கு மழை வருமென்று தெரியவில்லை என்று தமிழக அரசு கூறுகிறது; எந்தளவுக்கு மழை வந்தாலும் தமிழக அரசு எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். கட்டமைப்புகளை இன்னும் சரி செய்து இருக்க வேண்டும். மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளக்கூடாது என்பதற்காக ரூ.5 கோடியில் மத்திய அரசு திட்டத்தை புதுச்சேரிக்கு தந்துள்ளது. கழிவு நீர் அகற்றுவதில் இயந்திரங்களின் பயன்பாடு பாதுகாப்பானதாக அமையும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com