

பாட்னா,
பீகார் சட்டசபையில் நேற்று அனைத்து கட்சி தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய குடிமக்கள் பதிவேடு பீகார் மாநிலத்துக்கு தேவையற்றது. தேசிய மக்கள்தொகை பதிவேடு, 2010-ம் ஆண்டில் கேட்கப்பட்ட கேள்விகளுடனே இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் அனைத்து கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
முன்னதாக, முதல்-மந்திரி நிதிஷ் குமார் பேசுகையில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் கூடுதலாக சேர்க்கப்பட்ட கேள்விகளை நீக்குமாறு மத்திய அரசுக்கு எழுதி உள்ளோம். பெற்றோரின் பிறந்த இடம், தேதி போன்ற தகவல்கள் யாரிடமும் கேட்கப்படாது. எனவே, குழப்பம் தேவையில்லை என்றார்.