வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு

உத்திரப்பிரதேசம் முசாபர்நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு
Published on

முசாபர்நகர்

உத்தரபிரதேசத்தில் கடந்த செப்டம்பர் 14ம் தேதி அன்று முசாபர் மாவட்டத்தின் பாமன்கேரி பகுதியில் வயதான நபரிடமிருந்து மங்கல், சோனு மற்றும் அனுஜ் ஆகியோர் கொள்ளையடித்தனர்.

இந்த நிலையில் கடந்த 28ம் தேதி அன்று அவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். இதில் மங்கல் மற்றும் சோனுவுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

கொள்ளையர்களிடம் இருந்து ரூ .20,000 ரொக்கம், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com